2 “அந்த நாளில், நான் நாட்டிலிருந்து விக்கிரங்களின் பெயரை அகற்றிவிடுவேன், அவை இனி ஒருபோதும் நினைக்கப்படுவதில்லை” என சேனைகளின் யெகோவா கூறுகிறார். “பொய் தீர்க்கதரிசிகளையும், அசுத்த ஆவியையும் நாட்டிலிருந்து நீக்குவேன். 3 இனி ஒருவன் பொய் தீர்க்கதரிசனம் சொல்வானாகில், அவனைப் பெற்ற தாய் தகப்பன் அவனிடம், ‘நீ யெகோவாவின் பெயரில் பொய் சொன்னாய். ஆதலால் நீ சாகவேண்டும்’ என அவனுக்குச் சொல்வார்கள். அவன் தீர்க்கதரிசனம் சொல்லும்போதோ, அவனுடைய பெற்றோர்கள் அவனைக் கத்தியால் குத்துவார்கள்.
4 “அந்த நாளில் பொய் தீர்க்கதரிசி ஒவ்வொருவனும், தன்னுடைய தரிசனங்களைக்குறித்து வெட்கமடைவான், அதனால் அவன் மக்களை ஏமாற்றும் நோக்கத்தோடு இறைவாக்கு உரைப்போருக்குரிய ஆட்டு மயிர் உடையை உடுத்தமாட்டான். 5 அவனோ, ‘நான் ஒரு தீர்க்கதரிசி அல்ல, நான் ஒரு விவசாயி; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைவாங்கினான் என்பான்.’ 6 ஒருவன் அவனிடம், ‘உன் உடலில் இந்தக் காயங்கள் எப்படி உண்டாயின?’ எனக் கேட்டால், அதற்கு அவன், ‘என் நண்பர்களின் வீட்டிலே நான் பட்ட காயங்கள்’ என்பான்.
மந்தை சிதறடிக்கப்படுதல்
7 “வாளே, என் மேய்ப்பனுக்கு எதிராக விழித்தெழு,
எனக்கு நெருங்கிய மனிதனுக்கு எதிராய் விழித்தெழு!”
என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
“மேய்ப்பனை அடி;
செம்மறியாடுகளும் சிதறடிக்கப்படும்.
நானோ அதின் குட்டிகளுக்கு எதிராக என் கையைத் திருப்புவேன்.
8 நாடு முழுவதிலும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள்
வெட்டுண்டு அழிந்துபோவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
எனினும், “மூன்றில் ஒரு பங்கு மீதியாய் அதில் விடப்படும்.
9 இந்த மூன்றில் ஒரு பங்கையும் நான் நெருப்புக்குள் கொண்டுவருவேன்,