சுற்றிலுமுள்ள மற்ற பறவைகளோ அதற்கு எதிராக எழுந்துள்ளன.
அதை விழுங்கும்படி
காட்டு மிருகங்களை ஒன்றுசேர்த்து, அவைகளைக் கொண்டுவா.
10 அநேக மேய்ப்பர்கள் என் திராட்சைத் தோட்டத்தை அழித்துவிடுவார்கள்.
என் வயலை மிதித்துப் போடுவார்கள்.
அவர்கள் எனது அழகான வயலை
ஒரு வனாந்திரமான பாழ்நிலமாக்கி விடுவார்கள்.
11 அது எனக்கு முன்பாக வறண்டு,
வனாந்திரமான பாழ்நிலமாகும்.
அது கவனிப்பார் இல்லாதபடியால்
நாடு முழுவதும் பாழ்நிலமாகும்.
12 பாலைவனத்தில் எல்லா வறண்ட மேடுகள்மேலும்
அழிக்கிறவர்கள் கூடுவார்கள்.
யெகோவாவின் வாள் நாட்டின்
ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை பட்சிப்பதால்,
ஒருவருக்குமே பாதுகாப்பு இருக்காது.
13 அவர்கள் கோதுமையை விதைத்தார்கள், முட்களை அறுப்பார்கள்;
அவர்கள் களைத்து வேலை செய்வார்கள், ஆனால் பலனேதும் பெறமாட்டார்கள்.
யெகோவாவின் பயங்கர கோபத்தின் நிமித்தம்
அவர்கள் அறுவடையின்றி ஏமாந்து வெட்கமடைவார்கள்.
14 யெகோவா சொல்வது இதுவே: “என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு நான் கொடுத்த உரிமைச்சொத்தைப் பறிக்கிற கொடுமையான அயலவரைப் பொறுத்தவரையில், நான் அவர்களுடைய நாடுகளிலிருந்து அவர்களை வேரோடு அறுப்பேன். யூதா குடும்பத்தையோ அவர்கள் மத்தியிலிருந்து பிடுங்கி எடுத்துக்கொள்வேன். 15 ஆனால் அவர்களைப் பிடுங்கிய பின்பு மீண்டும் அவர்களில் இரக்கங்கொண்டு அவர்கள் ஒவ்வொருவனையும் அவனவனுடைய உரிமைச்சொத்துக்கும் சொந்த நாட்டுக்கும் கொண்டுவருவேன். 16 அவர்கள் என் மக்களின் வழிகளை நன்றாகக் கற்றுக்கொண்டால், அவர்கள் என் மக்கள் மத்தியில் நிலைபெறுவார்கள். முன்னொரு காலத்தில் பாகாலின்மேல் ஆணையிட என் மக்களுக்கு அவர்கள் போதித்திருந்தார்கள். அதுபோல இப்பொழுது அவர்கள், ‘யெகோவா இருப்பது நிச்சயமெனில்’ என்று என் பெயரினால் ஆணையிடுவதற்கு பழகினால், அவர்கள் நிலைபெறுவார்கள். 17 ஆனால் எந்த மக்களாவது இதற்குச் செவிகொடாமல் விட்டால், நான் அதை முழுவதும் வேரோடு அறுத்து அழித்துவிடுவேன்” என்று யெகோவா கூறுகிறார்.