சங்கீதம் 131
தாவீதின் ஆரோகண பாடல்.
1 யெகோவாவே, என்னுடைய இருதயம் பெருமைகொள்வதில்லை,
என்னுடைய கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல;
பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை.
2 தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என்னுடைய ஆத்துமாவை அடக்கி அமரச்செய்தேன்;
என்னுடைய ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.