Link to home pageLanguagesLink to all Bible versions on this site
அத்தியாயம் 8
பென்யமீனியனாகிய சவுலின் வம்ச வரலாறு
1 பென்யமீன், பேலா என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அஸ்பேல் என்னும் இரண்டாம் மகனையும், அகராக் என்னும் மூன்றாம் மகனையும், 2 நோகா என்னும் நான்காம் மகனையும், ரப்பா என்னும் ஐந்தாம் மகனையும் பெற்றான். 3 பேலாவுக்கு இருந்த மகன்கள் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள். 4 அபிசுவா, நாகாமான், அகோவா, 5 கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் மகன்கள். 6 கேபாவின் குடிகளுக்கு முக்கிய தலைவர்களாக இருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே. 7 கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டு போனபின்பு, ஊசாவையும் அகியாதையும் பெற்றான். 8 அவர்களை அனுப்பிவிட்டபின்பு, சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம், பாராள் என்னும் தன்னுடைய மனைவிகளிடம் பெற்ற பிள்ளைகளைத்தவிர, 9 தன்னுடைய மனைவியாகிய ஓதேசால் யோபாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும், 10 எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவர்களான இவர்கள் அவனுடைய மகன்கள். 11 ஊசிம் வழியாக அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான். 12 எல்பாலின் மகன்கள் ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன். 13 பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவர்களாக இருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளைத் துரத்திவிட்டார்கள். 14 அகியோ, சாஷாக், எரேமோத், 15 செபதியா, ஆராத், ஆதேர், 16 மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் மகன்கள். 17 செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர், 18 இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் மகன்கள். 19 யாக்கிம், சிக்ரி, சப்தி, 20 எலியேனாய், சில்தாய், ஏலியேல், 21 அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் மகன்கள். 22 இஸ்பான், ஏபேர், ஏலியேல், 23 அப்தோன், சிக்ரி, ஆனான், 24 அனனியா, ஏலாம், அந்தோதியா, 25 இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் மகன்கள். 26 சம்சேராய், செகரியா, அத்தாலியா, 27 யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் மகன்கள். 28 இவர்கள் தங்களுடைய சந்ததிகளின் பிதாக்களிலே தலைவர்களாக இருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள். 29 கிபியோனிலே குடியிருந்தவன் யேயேல், இவன் கிபியோனின் மூப்பன்; அவனுடைய மனைவியின் பெயர் மாக்காள். 30 அவனுடைய மூத்த மகன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள், சூர், கீஸ், பாகால், நாதாப், 31 கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள். 32 மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலே தங்களுடைய சகோதரர்களுக்கு அருகில் குடியிருந்தார்கள். 33 நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான். 34 யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான். 35 மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள். 36 ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான். 37 மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பா; இவன் மகன் எலெயாசா; இவனுடைய மகன் ஆத்சேல். 38 ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லோரும் ஆத்சேலின் மகன்கள். 39 அவனுடைய சகோதரனாகிய எசேக்கின் மகன்கள் ஊலாம் என்னும் மூத்தமகனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் மகனும், எலிப்பெலேத் என்னும் மூன்றாம் மகனுமே. 40 ஊலாமின் மகன்கள் பலசாலிகளான வில்வீரர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மகன்களும் பேரன்களும் இருந்தார்கள்; அவர்கள் எண்ணிக்கை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லோரும் பென்யமீன் சந்ததிகள்.

<- 1 நாளாகமம் 71 நாளாகமம் 9 ->